இளநீர்

இளநீர்க் கடையில் ஓர் இனியநாள்இளநீர்க் கடையில் இருவரும்

 

இரண்டு ஸ்ட்ராவில்
ஒரே
இளநீரை உறிஞ்சியவாறே !

கவிதை ஒன்று சொல்லவா நான் ?
என்னேடி இது ஆச்சரியம்,
இளநீர் குறையாமல் அப்படியே இருக்கிறதே,

தவிக்கத் தண்ணீர்குடிக்க ஆரம்பித்த
சங்க கால மான்களா நாம் ?

போதுமே உங்கள் கவிதை,
இளநீர்கடைக் காரனுக்கு ஏவாரம் போகிறதாம்
 திட்டுகிறான் பாருங்கள்.

-என நறநறத்தாய் நீ !

பையில் நல்லவேளை
நிறைய இடம் இருந்தது.

இன்னும் லஸ்ஸிக்காரன்,  ஜூஸ்காரன்
திட்டுக்களை எல்லாம்
கட்டிக் கொண்டு போக வேண்டுமே !

-மகுடதீபன் நிலாமுற்றம் 

Leave a Comment