சீதைதான் பெண்ணே நீ !

பனிக்கட்டி விழப்
பார்த்திருக்கிறேன்
ஆலங்கட்டி மழையில்,
பார்த்திருக்கிறேன்
ஆலங்கட்டி மழையில்,
உன் பார்வையிலுமா ?
அதெல்லாம் சரி,
விழுந்த இதயம்
ஏன இப்படிப்
பாஸ்பரஸ் கட்டியாய்ப்
பற்றி எரிகிறது. . .?
பற்றி எரிந்தும்
மனசுக்குள் அழியாது
பரிசுத்தமாய்
ஜ்வலிக்கிறதே நின் உரு. . .!
நிச்சயம் சீதைதான் பெண்ணே நீ !