தாங்க !

தாங்க . . .!

பத்ம பாதர் என்ற மகான்
நீர்மேல் நடந்த போது

ஒவ்வொரு பத்மக் கமலம் முளைத்து
அவரைத் தாங்கிக் கொண்டனவாமே . . .

என்பது எல்லாம் கதையா நிஜமா தெரியாது !

ஆனால் எங்கெல்லாம் நீ செல்கிறாயோ
அங்கெல்லாம் என்
கைமலர் மட்டும் முளைத்துக்
காத்திருக்கும் நின்
காலடி தாங்க . . .!

Leave a Comment