தொலைக் காட்சி

தொலைக் காட்சிuser posted image

தொலைக் காட்சித் தொடரில்
கஸ்தூரியும், அபியும்
கவனிக்கப் படும் அளவுக்குப்
பாவம்
கணவன் மார்கள்
கவனிக்கப் படுவதில்லை.

வெள்ளைத்தோசை கூட
அவர்களுக்கு
விளம்பர
இடைவேளையின் போதுதான். . .

சாப்பாடு கூட
தொலைக் காட்சி பார்த்தபடி
தின்றால்தான்
தொண்டைக் குழிக்குள் இறங்குகிறது. . .

சாப்பாட்டுக்கு
சைடு டிஷ் எதுக்கு
கண்ணால் தொட்டுச் சாப்பிடத்
மெகா சீரியல்
இருக்கும் போது ?

இதற்கிடையில்
பிரம்மலோகத்தில்
அவசரக் கூட்டத்தில்
ஆலோசனை நடக்கிறது
வருங்காலப் பெண்களின்
கண்ணீர் கோளத்தைப் பெரிதாக
டி.வி. அழுகுணி சீரியலுக்குத் தக்கபடி
வடிவமைப்பது எப்படி என்று. . .

பார்த்துப் பார்த்துப் பழகிய
பையன்களின் தலைமுறைக்கு
பவுதீக ஆராய்ச்சியில் நோபல்
பரிசு பெறுவது அல்ல,
தொலைக் காட்சியின்
பேயாட பிசாசாட
நடன நிகழ்ச்சியில்
ஆடுவதே
ஏக்கமும் கனவுமாக
இருக்கிறது. . .!

கடலிலே உப்பின் அடர்த்தி
அதிகமான காரணம் என்ன என

அழுகுணி சீரியல் முன்
அமர்ந்துள்ள
நம் பெண்களின்
கண்ணீர் ந்திப் பிரவாகங்களைக்
கணக்கில் எடுக்காமல்
விஞ்ஞானிகள் ஒருபக்கம்
வெட்டியாய் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். . .

அப்பா பேருக்கு ஒண்ணு
மக பேருக்கு ஒண்ணு
தம்பி பேருக்கு ஒண்ணு என
மூணு ரேஸன் கார்டு வாங்கி வச்சது
நல்லதாப் போச்சு,

மூணு அரசு டி.வி வாங்கி
ஒவ்வொரு அறையிலும்
வச்சாச்சு !

அடுத்த அரசு அறிவிப்பு
என்று வரும் டி.வி.க்கு
கேபிள் கனெக் ஷன் இலவசம் என. . .?

டி.வி. நிகழ்ச்சியின் போது
விருந்தினர் வந்தால் . . .?

முகம் திரிந்து
நோக்க க் குழையும் விருந்து . . .
என்றது எல்லாம் வள்ளுவர் காலம் !
நோக்க எங்கே நேரம் ?

பேசாம்ல் கிட பெனாத்திக்கிட்டு . . .!
- என பெட்டில் கிடக்கும் பெத்த
அம்மாவை அதட்டி
அபியின் கவலையில்
துயரப் பங்கேற்பு !

வேறு ரிமோட் வாங்கணும்,
சேனல் சேஞ்ச் பட்டன் மட்டும்
தேஞ்சு போச்சு . . .!

அரைக் கரண்ட் வந்தாலோ
அன்று பவர் கட் என்றாலோ
எல்லாப் பெண்டிரின்
ஏகோபித்த அர்ச்சனை. . .

-கழிச்சல்ல போவானுக . . .!
கஸ்தாரி வார நேரம் பார்த்தா
கரண்ட் ஆப் பண்ணுவானுக . . .?
நிச்சயம் EB Line Man க்கு
அடுத்த நாள் வயிறு கடபுடா . . .!

ஆட்டம் பாட்டம் பார்த்து
ஆடும் LKG UKGகள்
பெற்றோர் மனம்
பெரிதாய் புளகாங்கிக்கும்.
பிறந்த பேறு அடையும். . .!

வீடும், குடித்தனமும்
தொலைக் காட்சி பெட்டி அளவு
சுருங்கி விடுமோ . . .?
அல்லது
அதற்றகு உள்ளேயே ஆகி விடுமோ,
மனசும் !

நேரமாச்சு,
இன்னைக்குக்
குடியரசு தினம் . . .
சும்மா இப்படி எழுதிக் கொண்டிருந்தால்
நம் தியாகிகள் கோபித்துக் கொள்வார்கள் . . .

விஷாலோடு கொண்டாடவேணும்,
அவர் நடிச்சு
திரைக்கு வந்து
சில நொடிகளே ஆன
ஒரு படம்
இன்னைக்குத்
தொலைக் காட்சியில். . .!

வரட்டா ?

நன்றி

4 Comments

  1. 1
    Parasuram Says:

    Innaiku ulla kanavanmaargalin nilaiyai’yum thol(l)aikaatchi thodargalai patriyum azhagaga solli irukeenga…

  2. 2
    Parasuram Says:

    thol(l)aikaatchi thodargalai patriya arumaiyana vimarsanam…. pengal paarka vaendiya onru….

  3. 3

    நன்றி பரசுராம் தங்கள் வாழ்த்திற்கும்
    ஊக்குவிப்புக்கும் . . .

    தமிழில் அழகாக எழுதலாம் முயலுங்களேன் . . .

    இ-கலப்பை அல்லது NHM Editor பதிவிறக்கம் செய்து கொண்டால் நல்லது.

  4. 4
    ashok Says:

    during olden days..our entire family used sit and have dinner together with a radio playing dramas…we used to listen to it, chat and have our food..nowadays ppl are having food with their tv sets….


RSS Feed for this entry

Leave a Comment