முக்கோணப் பார்வை

‘அடடே, இதென்ன மோதிரத்தில் கறுப்பு முடி ?
காதலியின் முடியோ ? ‘
எனக் கிண்டலடித்தேன் நண்பனை !
‘மோதிரத்தில் மட்டுமா,
இதோ என் கைக் கங்கணத்தில் கூடத்தான்,
ஆனால் இது காதலியின் முடி அல்ல,
ஆனை மு டி !
தைரியம் வருமாக்கும் !’
-எனக் காட்டினான் தைரியமாக . . .
அட,
ஆனை முடிக்கே இவ்வளவு தைரியம் என்றால்
ஆனைத் தோலையே போர்த்த
அப்பா நடத்தரயா,
உன்னையே அல்லோ போர்த்திக் கொள்கிறேன் நான்,
எனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் ?
* * *
‘அடடே, இதென்ன மோதிரத்தில்
ஆனை முடியா ? ‘
- எனக் கேட்டேன் நண்பனை !
‘ இல்லை இல்லை என்
காதலியின் முடியாக்கும் !’
- என்றான் கசிந்து உருகி !
அடப் பாவி,
இப்படியுமா செய்வார்கள் – என நினைத்தேன்
தொடர்ந்தான் அவன் !
‘ஆனை முடி கட்டினால்
அளவற்ற தைரியம் வருமாம்
இது அவள் முடி
காதல்தான் வருகிறதே தவிர
சொல்லமட்டும் தைரியம் வரவில்லை ! ‘
* * *

அ ட டே, இது என்ன,
மோதிரத்தில் ஆனை முடியா,
இல்லை உன் காதலியின் முடியா,
- என வேடிக்கை பண்ணிணேன் நண்பனை !
‘ஆமா, ஆமா,
ஆனை மாதிரி உள்ள காதலி முடி,
போதுமா ? ‘
- என்றான் என் குண்டு நண்பன் !