யுரேகா . . . !

யுரேகா . . . !

நீச்சல் குளத்தில்
அமிழ்ந்து குளித்த போது
உன்னால் இடம் பெயர்ந்த
நீரின் அளவு. . .

இரயில் நிலையத்தில்
எடை பார்க்கும் எந்திரத்தில் நின்ற போது
உன் எடை
சும்மா இராமல் இரண்டையும் வகுத்த போது
ஆச்சரியம்.
இதென்ன விடை 13.6 . . .?

இதுவா மனித உடலின் அடர்த்தி எண் என
ஆவலை அடக்க முடியாமல் புத்தகம் புரட்டினால்
அடர்த்தி எண் 13.6 க்கு நேரே
போட்டிருந்தது தங்கம் என . . .

-magudadheeban@gmail.com 

மகுடதீபன் நிலாமுற்றம்

Leave a Comment