எப்படியும் எடுத்துக் கொளலாம் . . .
மாலை வேளை
மலர் குலுங்கும் பூஞ்சோலை. .!
‘ எச்சில் துப்பாதே இங்கே
என்றது எச்சரிக்கைப் பலகை.
எனக்கோ சரியான
சளியும், தும்மலும் . . .
முட்டிக் கொண்டு வர
முழுங்கினேன்
சட்டம் மதிக்க வேணும்
என்பதற்காக அல. . .
தும்மினால்
நெஞ்சுக்குள் முத்திரை இட்டு ஆடும் நீ
எங்கே வெளியே
விழுந்து விடுவாயோ என . . .!
- M A G U D A D H E E B A N