Archive for the 'ஒரு குடைக்கீழ்' Category

ஒரு குடைக் கீழ்

மே 5, 2008

ஒரு குடைக்குள் . . .

மாலை வேளை
மழைவரப் போகிறது எனத் தெரிந்தும்
மறந்து வரலாமா, குடை கொண்டு வர ? – என
மலர்ச் சோலையில் காத்திருந்த நீ
மழலைக் கோபம் கொள்ள,
மறதியா, எனக்கா
வேணுமென்றுதானே நான் மறந்தேன்
மகா அலெக்ஸாண்டரைப்போல்
மண்ணுலகம் பூரா ஒருகுடைக் கீழ்
கொண்டு அரசாளவா , இல்லை இல்லை
உனக்கே பற்றாமல் உடல்நனைக்கும்
உன் குடைக்குள் ஒட்டி
உலாப் போக அல்லவா
ஆசைப் பட்டேன் ?
மந்தார மழையே
நிற்காமல் தூவிக் கொண்டேயிரு
உரசி உரசி  
ஊர் வந்து சேரும் வரை . . .!
மகுடதீபன் 9486102034