கடல் . . .————
கடலிலே கண்டம் எனச்
கணித்தான் சோதிடன் !
கவனமாய் இருந்தேன் கடல்பாராமல் . . .
நீத்தார் கடனுக்கு
நீலக் கடல் தீர்த்தம் போய் ஆடாமல் . . .
வாய்ப்பு வந்தும்
விமானம் கடல் மேல் பறக்குமே என
வெளிநாடு போகாமல் . . .
விழுந்து பட்ட பின்புதான்
தெரிந்தது
அது நின் விழித் தடங் கடல் என . . !
மகுடதீபன் +919486102034