கட்டு . . .!
கானகத்தே காதலியைக்
காரிருளில் கைவிட்டுப்
போனதுவும் வேந்தர்க்குப்
போதுமோ – என்பதெலாம்
புராணகாலம் மட்டுமா – இப்
புது யுகத்தில் கூடத்தான் . . .!
உன்னைக் காணும் வரை
ஜடமாகத் தான் இருந்தேன் . . .
அதற்குள் மறைந்ததெங்கே
என் இனிய காதலனே !
உயிர் கொடுத்தாய் நீதான்
உளத்தில் மட்டுமா,
உதரத்திலும் . . .
நான் என்ன மும்தாஜ் போல்
தாஜ் மகாலையா,
வெறும்
தாலியைத்தானே
கட்டு என்று கேட்டேன் ?
- M A G U D A D H E E B A N