கன் – கண் – – எது சரி ? .
அடிக்கடி சந்தேகம்
வருகிறது கவிஞரே எனக்கு . . .
கண்ணுக்கு இரண்டு சுழி -ன் – போடவேண்டுமா,
இல்லை மூணு சுழியா ?
-சில சமயம் குழம்பிக் கேட்கிறாய்,
உன் கண்ணைப் பொருத்த மட்டில்
இரண்டு சுழி போட்டால் கூட அது
சரிதான் சரிதான் சரிதான் . . .!
நீ பார்த்த பார்வைத் தீட்சண்யத்தில்
உள்ளம் சல்லடையாய்த் துளைத்துக்
கிழிபட்டது எனக்கல்லவா தெரியும் ??
நிச்சயம் அது GUN தான் !
-மகுடதீபன் 9486102034