Archive for the 'கிலோ 60 x 2' Category

கிலோ 60 x 2

ஜூலை 24, 2008

60கிலோ 120கிலோவாக ஆனதேன் ?
———————————————————-
கோவில் துலா பாரம்
ஏறி நின்றேன்
காணிக்கை செலுத்த என. . .
அறுபது கிலோ மட்டுமே இருந்தது
காணிக்கைப் பொருள்  
அதுவே என் எடை அதே என்பதால் . . .!
தராசுத் தட்டில் அமர்ந்த
அந்த நேரம் பார்த்தா
எதிரில் வரவேண்டும் நீ ?
காரியத்தைக் கெடுத்தாயே இராட்சஸீ
நெஞ்சத் தட்டிலும்
 கனமாக வந்து அமர்ந்து கொண்டு . .!
ஐயோ ஐயோ
கடவுளே ,  
காணிக்கை எடை
இன்னோர் பங்கு என்றால்
எங்கே போவேன் இங்கே இனி ?

எரிதழல்
கவிதை1000