Archive for the 'தேவதையின் சுவடு' Category

தேவதையின் சுவடு

மே 25, 2008

தேவதையின் சுவடு
உந்தன் காலடி மண் எடுத்து
உருவச் சிலையாய் உனைவடிக்க
வந்தேன் சிற்பக் கலைஞன் நான்
வருவாய் நீஎனக் காத்திருந்தேன்
கோவிலை விட்டு நீநடந்து
கொஞ்சத் தூரம் சென்றிருப்பாய்
பாவிய காலடிச் சுவடெங்கே
பாதையில் தேடிக் களைத்திட்டேன்
அயர்ந்தேன் காலடித் தடம் தேடி
அங்கும் இங்கும் மிக வாடி
உயர்கோ புரத்தில் ஒரு பூத
உருவம் சிரித்துச் சொல்லியது.

முட்டாள் கலைஞா தேவதைக்கும்
முன் வரும் தென்றல் காற்றுக்கும்
பட்டுப் பாதச் சுவட்டின் அடி
பதிவதுண் டோ சொல் எங்கேனும் ?

காதில் பூதம் சொல்லியது என்
கவனக் குறைவால் விழவில்லை
ஏதும் உமக்கு விழுந்தால் இவ்
ஏழை யேற்குச் சொல்லுங்கள்

 
மகுட தீபன் +91-94861 [...]