Archive for the 'நழுவும் மீன்' Category

நழுவும் மீன்

மே 5, 2008

நழுவி விழும் மீன்

கோவில் தெப்பக்
குளப் படித்துறையில்
குதிக்கும் மீன்களுக்குப்
பொரி போட்ட படியே
குதூகலிக்கிறாய் !
குளத்தில் குதிப்பவை நிஜ மீன்களா,
உன் விழிகளின் பிரதி பிம்பங்களா
என்ன ஆராய்ச்சி இப்போது வேண்டாம்
எதற்கும் கொஞ்சம்
இருப்பாய் உஷாராக
நீர் பார்த்த விழிக் கயல் இரண்டும்
நழுவி விழுந்து விடப் போகிறது !
 
மகுடதீபன் 9486102034