பா ர் வை
என்ன, எப்பப் பார்த்தாலும்
என் கண்களேயே பார்த்துக் கொண்டு . . .
அதில் என்ன உலகமா தெரிகிறது ?
- எனச் செல்லமாகச் சிணுங்குகிறாய் !
யசோதைக்கு கண்ணன் வாயில்
அண்ட சராசரம் தெரிந்ததைப்போல்
ஆம் எனக்கு உன் பார்வையில்
அகிலமே தெரிகிறது. . .
பார்வை என்பதன் முதல் இரண்டு எழுத்துக்கு
உலகம் என்று பொருள்
அதன் கடைசி எழுத்துக்குக்
கூர்மை என்று பொருள்
என அகராதியில் போட்டிருந்தாலும்
அதை எல்லாம் தெரிந்து கொள்ள
அகராதி ஏன் படிக்கவேண்டும் நான் ,
உன் பார்வையைப் படித்தால் பத்தாதா ?
-மகுடதீபன் 9486102034