Archive for the 'பிருத்விஇராசன்' Category

பிருத்வி இராசன் குதிரை . . .

மே 7, 2008

டூவீலரில் பறந்தால்
முன்னால்தானே
காற்றடிக்கும் ?
ஆனால் அன்று
முதுகுத் தண்டோடு
அப்படியே தென்றல் அப்ப. . .
பௌதீக விதிகள் பொய்யா
எனத் திரும்பிப் பார்த்தால். . .
அடிப் பெண்ணே,
பின்சீட்டில்
அப்படியே
அப்பிக் கொண்டு நீ . . .!
ஏ, சேடக் !
பறந்து சீக்கிரம்
ஊர் சேரடா. . .!
இரசாயன விதிகள்
மெய்ப்படும் முன் . . .!

மகுடதீபன்