வயிற்றுவலி
வரும்போதெல்லாம்
கண்ட கண்ட ஆங்கில மருந்து மாத்திரைகளைக்
கபளீகரம் செய்வதே இல்லை
காரணம் ஏனென்றால்
கண்மணீ,
நான் ஓர் இயற்கை வைத்தியன். . .!
மண்ணைத் தண்ணீரில் குழைத்து
வயிற்றிலே தடவுவேன்
வயிறு வலி பறந்து விடும்,
அந்த
மண்மட்டும் நின்
மலரடி நடந்த
மண்ணாக இருக்குமாயின் . . .!
- மகுடதீபன்