பஸ்ஸில்
ஏறும் தருணம் தொட்டு. . .இறங்கும் தருணம் வரை
எல்லா இடிகளையும் தாங்கித் தாங்கி. . .எந்த கவுதமனாலும் சபிக்கப் படாமலேயே
உடலும் உள்ளமும்
கல்லாகிப் போச்சுடா . . .!
நீயும் என்னைக்
கல் நெஞ்சக் காரி,
கல்நெஞ்சக் காரி
எனத் திட்டித் தீர்த்து . . .
எங்கேடா போய் விட்டாய்
என் இனிய இராமா !
அந்தக் கல் நெஞ்சில்
உன் பேரை எழுதிக்
கனவுக் கடலில் மிதக்கவிட்டு
எண்ணச்சேது கட்டுகிறேனே
எட்டுகிறதா உனக்கு ?
-magudadheeban